பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுக்க கடும் கட்டுப்பாடுகள்: மந்திரி பசவராஜ் பொம்மை

ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டாலும், புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. பெங்களூருவில் 2 நாட்கள் அதாவது வருகிற 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மந்திரி பசவராஜ் பொம்மை
மந்திரி பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூரு :

கர்நாடகத்தில் அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதனால் புத்தாண்டு கொண்டாடலாம் என்று அர்த்தம் இல்லை. ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டாலும், புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இதை தடுக்க பெங்களூருவில் 2 நாட்கள் அதாவது வருகிற 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதுகுறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவுக்கு என்றே விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.

அதனால் அரசு விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் மதிக்க வேண்டும். கொரோனா வைரசை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com