காவலாளி மரணத்தில் மர்மம்: மேலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மேலூர் அருகே காவலாளி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மேலூர்:

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது40). இவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி சேர்ந்த செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார்

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலூர் -சிவகங்கை சாலை மற்றும் நான்கு வழிச்சாலை சந்திக்கும் இடத்தில் ஒரு தனியார் ஓட்டல் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

அதில் அன்பழகன் வாட்ச்மேனாக இவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் நான்கு வழி சாலையில் இவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த மேலூர் போலிசார் உடலை கைப்பற்றி அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றதாக கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர்

ஆனால் அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேலூர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

அன்பழகன் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு இறக்கவில்லை என்றும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி புகார் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் 

X

Maalai Malar
www.maalaimalar.com