கயத்தாறில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று கயத்தாறில் ம.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறில் ம.தி.மு.க.வினர் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்.
கயத்தாறில் ம.தி.மு.க.வினர் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்.
Published on

கயத்தாறு:

கயத்தாறில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தம், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு இயற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் கோடையடி ராமச்சந்திரன், மாநில தீர்மான குழு உறுப்பினர் கிருஷ்ணசாமிபாண்டியன், காயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் கயத்தாறு நகர செயலாளர் முருகன், கடம்பூர் நகரச் செயலர் ரங்கசாமி, மாநில இலக்கிய அணி செயலாளர் மகாராஜன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com