மயிலம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

மயிலம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

மயிலம்:

விக்கிரவாண்டி அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பிரகாஷ்(வயது 32). இவர் சென்னை மாதவரத்தில் உள்ள ஜல்லி மிக்சர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். பூண்டி கிராமத்தில் அவரது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரகாஷ், சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மயிலம் அடுத்த பாலப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இது தொடர்பாக மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com