மத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

மத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 62). விவசாயி. மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கதிரவன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com