

குழித்துறை:
மார்த்தாண்டம் வடக்குத்தெரு அஞ்சு கூட்டு விளையை சேர்ந்தவர் ஜெயசிங் (வயது 47). இவர் அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை
செய்து வந்தார். இதனால் ஜெயசிங் தினமும் அதிகாலையில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதே போல் நேற்று
அதிகாலையில் ஜெயசிங் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
மார்த்தாண்டம் ஜங்சனை தாண்டி சாங்கை பகுதியில் அவர் செல்லும் போது, எதிரே லாரி வந்தது. அப்போது லாரியும்-மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் ஜெயசிங் படுகாயம் அடைந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயசிங்
பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மோட்டார் சைக்கிள்
மீது மோதிய லாரி யாருடையது, எந்த பகுதியை சேர்ந்தது என்ற விவரம் தெரியவில்லை.
விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வீடியோ பதிவை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த ஜெயசிங்குக்கு ஷைனி (30) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.