தக்கலை அருகே திருமணம் நின்றதால் வாலிபர் தற்கொலை

தக்கலை அருகே திருமணம் நின்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பத்மநாபபுரம்:

தக்கலை அருகே திக்கணங்கோடு கோட்டவிளை பகுதியை சேர்ந்த தங்கராணி மகன் விஜய் (வயது 25), தொழிலாளி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு திருமணம் தடைப்பட்டது. இதனால் விஜய் கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவரை காணாததால் அவரை தேடி தங்கராணி சென்றார். அங்கு விஜய் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com