திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் கருப்பசாமி (வயது 31). இவர் கூலி தொழிலாளி. இவர் சிலோன்காலனி மேற்கு உள்ள தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

இவருக்கும் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இவர்களுக்கு வருகிற 17-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

திருமண ஏற்பாட்டில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளில் இருந்து கருப்பசாமி ஈடுபாடு இல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கருப்பசாமி இறந்து கிடந்தார். இதில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஓட்டப்பிடாரம் போலீசார், அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com