

பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். அரசு போக்குவரத்து கழக மெக்கானிக். இவருடைய மனைவி சங்கீதா (வயது 37). சங்கீதா அமானிமல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களுக்கு 14 வயதில் விஷாந்த் என்ற மகன் உள்ளான். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.