மொபட் மீது லாரி மோதி வாலிபர் பலி

மொபட் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 29). இவரது உறவினர் தேவேந்திரன்(27). இவர்கள் 2 பேரும் மருதையான்கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக மொபட்டில் வந்தனர். மேலமாத்தூர் அருகே வந்தபோது கவுல்பாளையத்தில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த தேவேந்திரன் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார், ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com