மொபட் இருக்கைக்கு அடியில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு

மொபட் இருக்கைக்கு அடியில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கொள்ளை
பணம் கொள்ளை
Published on

பூந்தமல்லி:

மாங்காட்டைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காக ரூ.1½ லட்சத்தை தனக்கு சொந்தமான மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார்.

வங்கிக்கு செல்லும் வழியில் தனது உறவினரின் வீட்டிற்கு சென்று, அவர்களை பார்த்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வங்கிக்குச் சென்றடைந்த அவர், பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதற்காக மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை எடுக்க முயன்றபோது, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

எங்கு தேடியும் பணம் கிடைக்காததால் இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாங்காடு போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com