மண்டபம் கோவிலில் கலசம் திருட்டு

மண்டபம் கோவிலில் கலசம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

ராமநாதபுரம்:

மண்டபம் மறவர்தெரு பகவதியம்மன் கோவில் கமிட்டித் தலைவர் சந்திரன்.

சம்பவத்தன்று இவர் ஊர்காரர்களுடன் சாமி கும்பிடச் செல்லும் போது கோவில் சுற்றுச்சுவரின் உள்பகுதியில் இருந்து யாரோ ஏறி குதித்து ஓடுவது போன்று தெரிந்தது.

பின்னர் அங்கு சோதனை செய்த போது சூலாயுதத்தை எடுத்து பொருட்கள் வைப்பறையின் கதவை உடைத்து உள்ளேயிருந்த 2 குத்து விளக்குகளின் நடுப் பகுதியை மட்டும் எடுத்துச் சென்று விட்டனர்.

சிறு வி‌ஷயமாக நினைத்து தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் போலீசாருக்கு புகார் தெரிவிக்காமல் இருந்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று விளக்கு ஏற்றச் செல்லும் போது பகவதி அம்மன் கோவில் மேல் கலசம் திருடு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து மண்டபம் போலீசில் புகார்செய்தனர். சப்- இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com