சிவகாசி அருகே மனைவியை தாக்கியவர் கைது

சிவகாசி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவருக்கும் இவரது மனைவி சங்கரேஸ்வரி (34) என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரேஸ்வரியின் பெற்றோர், மருமகனை சமாதானம் செய்து வைக்க மாரிமுத்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் மாரிமுத்து தனது மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சங்கரேஸ்வரி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய மாரிமுத்துவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com