நண்பரின் தந்தையை கத்தியால் குத்தி கொன்றவர் கைது

குடித்துவிட்டு வீட்டுக்கு வரக்கூடாது என்று தடுத்ததால் ஆத்திரத்தில் நண்பரின் தந்தையை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை ஒண்டிப்புதூர் ராமச்சந்திரா வீதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 65). இவரது மகன் பிரேம்குமார் (36). திருமணமாகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். பிரேம்குமாரும், அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மாணிக்கவாசகமும் (30) நண்பர்கள்.

இவர்கள் அடிக்கடி வெளியே சென்று மது குடிப்பது வழக்கம். சிலநேரங்களில் மாணிக்கவாசகம் மதுபோதையில் பிரேம்குமார் வீட்டிலேயே தூங்கி விடுவது உண்டு‌.

இந்த நிலையில் கடந்த 5 -ந் தேதி இரவு மாணிக்க வாசகம் மதுபோதையில் பிரேம்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ராஜன், மது குடித்துவிட்டு இங்கே வரக்கூடாது வெளியே போ என கூறி அவரை தடுத்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கவாசகம் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அவரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்க வாசகத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com