லாலாபேட்டை அருகே துப்புரவு தொழிலாளியை கத்தியால் தாக்கியவர் கைது

லாலாபேட்டை அருகே துப்புரவு தொழிலாளியை கத்தியால் தாக்கியவர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

லாலாபேட்டை:

லாலாபேட்டை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் சுப்பிரமணியன் என்பவர் நேற்று முன்தினம் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த பிச்சம்பட்டியை ேசர்ந்த சுப்பிரமணி (42) என்பவர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தார். இதனை சுப்பிரமணியன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியனை தாக்கினார். இதனால் காது பகுதியில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com