களியக்காவிளை அருகே லாரிக்கு தீ வைத்தவர் கைது

களியக்காவிளை அருகே லாரிக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

களியக்காவிளை:

புதுக்கடை அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 48). இவருக்கு சொந்தமான லாரியை பளுகலை அடுத்த செறுவல்லூரில் உள்ள மரக்குடோனில் இருந்து மரங்களை ஏற்றிகொண்டு அருகில் உள்ள எடை மேடையில் நிறுத்தியிருந்தனர். அப்போது ஒருவர் லாரிக்கு தீ வைத்துவிட்டு ஓடினார். தீ மள... மள...வென எரிந்து லாரி முழுவதும் பரவ தொடங்கியது. 

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்து விட்டு தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை முழுமையாக அணைத்தனர். இதில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மரம் மற்றும் லாரியில் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் விசாரணை நடத்தி லாரிக்கு தீ வைத்ததாக செறுவல்லூரை சேர்ந்த சத்யராஜ் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com