மொரப்பூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

மொரப்பூர் அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள சூரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 31). இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மொரப்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக குமரன் திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தனியார் நிறுவன உரிமையாளர் குமரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com