உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

உத்தரபிரதேசத்தில் கடந்த ஹோலி பண்டிகை தினத்தன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

அலிகார்:

உத்தபிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள கிராமத்தில், தலித் சிறுமி ஒருவரை, நபர் ஒருவர் இனிமையாகப் பேசி ஒரு தொழிற்சாலை அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றார். அங்கு அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

கடந்த ஹோலி பண்டிகை தினத்தன்று இச்சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, பாலியல் பலாத்காரம் செய்த நபரின் உறவினர்களின் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். எனவே அவர் இது குறித்து தனது முதலாளிகளிடம் நியாயம் கேட்டார்.

அப்போது அவர்கள் அவரை தாக்கியதாகவும், பாலியல் பலாத்காரம் குறித்து போலீசில் புகார் செய்யக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் சிறுமியின் தந்தை, தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரை தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவித்தார். அவர் ஆன்லைன் வாயிலாக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு, குறிப்பிட்ட நபரை நேற்று கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com