வெண்ணந்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்

வெண்ணந்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த நெ.3.கொமாரபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சேலம் - கரூர் ரெயில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடலில் காயங்கள் அதிகளவில் உள்ளதால் அவரை யாராவது கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com