தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகர மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் சிதம்பரநகர் மெயின் ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் சிதம்பரநகர் மெயின் ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் ரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாரியப்பன், இசக்கியப்பன், விஜயகாந்த், மாரிதுரை, கருப்பசாமி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com