மதுரை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு

மதுரை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

மதுரை:

மதுரை பரவை கம்பன் தெருவை சேர்ந்தவர் கார்மேகம். அவரது மனைவி கற்பகவள்ளி (வயது 48). சம்பவத்தன்று இவர் விளாங்குடி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் கற்பகவள்ளி அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com