மதுரை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு

மதுரை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

மதுரை:

மதுரை அச்சம்பத்து பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஜெயசங்கரி (வயது 46). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவில் மதுரை-திண்டுக்கல் மெயின்ரோடு பாத்திமா கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், ஜெயசங்கரி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், உடனடியாக செல்லூர் போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com