மதுரை அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் என அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மதுரை:

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் என அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அவர்கள் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாவட்ட சர்வே அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது மூர்த்தி பேசுகையில், தொடர்ந்து கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் தமிழக அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது. எனவே வருகிற19-ந்தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் நீதிராஜா, பொருளாளர் ராம்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com