போலி டாக்டர்கள் கொரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள்- நீதிபதி கருத்து

போலி டாக்டர்கள் கொரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை ஐகோர்ட்
மதுரை ஐகோர்ட்
Published on

மதுரை:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த ஜெயபாண்டி என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தற்காக போலீசார் கடந்த 2011-ம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததை ரத்து செய்யுமாறு ஜெயபாண்டி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்திய ஜெயபாண்டியை கைது செய்யாததற்கு அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், “கொரோனா தொற்று காலத்தில் ஏராளமான அரசு டாக்டர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் மனுதாரரை போன்ற போலி டாக்டர்கள், கொரோனா கிருமியை விட மிகவும் ஆபத்தானவர்கள். போலி நபர்களின் அடையாளம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மனுதாரரின் மருத்துவமனைக்கு சீல் வைத்ததில் தலையிட முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com