காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை- கணவன் தற்கொலை முயற்சி

உமாதேவி திருமண வயதை எட்டியதும் பாலகிருஷ்ணன் முறைப்படி திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் லட்சுமிபுரம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 25), தச்சு தொழிலாளி. இவரது மனைவி உமாதேவி (19).

அருப்புக்கோட்டையை சேர்ந்த இவர் பாலகிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கடந்த 5 மாதங்களாக ஜெய்ஹிந்துபுரத்தில் கணவருடன் வசித்து வந்த உமாதேவி, அந்த பகுதியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்தார்.

கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இன்று அதிகாலை அவர்கள் வீட்டுக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் எட்டி பார்த்தபோது அங்கு பால கிருஷ்ணன் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ஹிந்து புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது பாலகிருஷ்ணன் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டன. அவரை தூக்கியப்போது அங்கு உமாதேவி பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உமா தேவி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில், உமாதேவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உளியால் கயிற்றை அறுத்து கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்ததாகவும், இதனால் மனவேதனை அடைந்து தனது உடலில் உளியால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிருஷ்ணனும், உமாதேவியும் 5 ஆண்டுகளுக்கும்மேல் காதலித்துள்ளனர். 16 வயதிலேயே உமாதேவி வீட்டை விட்டு வெளியேறி பாலகிருஷ்ணனுடன் சென்றுள்ளார். அவர் மைனர் பெண் என்பதால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாலகிருஷ் ணனை கைது செய்தனர்.

அதன் பிறகு உமாதேவி திருமண வயதை எட்டியதும் பாலகிருஷ்ணன் முறைப்படி திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே குடும்பத்தினரை மீறி பாலகிருஷ்ணனும், உமாதேவியும் திருமணம் செய்து ஜெய்ஹிந்துபுரத்தில் வசித்துள்ளனர்.

இந்த நிலையில் உமா தேவி தற்கொலையும், பாலகிருஷ்ணனின் தற்கொலை முயற்சியும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com