திருப்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

திருப்பூர் அருகே ஊரடங்கு வறுமையில் இருந்து மீள முடியாததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டு பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சலி (வயது 22). இவர் கடந்த 2017-ம் ஆண்டு காங்கயம் அருகே உள்ள தேவனாம்பாளையத்தை சேர்ந்த ராஜகுரு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் காங்கயம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் ஓராண்டுக்கு பிறகு வெள்ளகோவிலுக்கு வந்து குடியேறினர். ராஜகுரு பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ராஜகுருவுக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. அன்று முதல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போதும் போதிய வருமானம் இல்லாததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் ராஜகுரு வேலைக்கு சென்று விட்டார். சஞ்சலி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெகு நேரமாக வீடு பூட்டி கிடந்ததால் அருகே வசிக்கும் சஞ்சலியின் உறவினர் பிரபாகரன் என்பவர் சந்தேகமடைந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை உள்புறமாக பூட்டி இருந்தது.

இதையடுத்து வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த போது சஞ்சலி துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com