கல்லிடைக்குறிச்சி அருகே காதல் பிரச்சினையில் தொழிலாளி மீது தாக்குதல்- வாலிபர் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே பெண்ணுக்கு காதல் வலை வீசிய பிரச்சினையில் தொழிலாளியை கம்பால் அடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). தொழிலாளி. இவரது உறவு பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் அடிக்கடி பின்னால் சென்று காதல் வலை வீசினார். இதனால் மணிகண்டன் அந்த வாலிபரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபரின் நண்பரான சின்ன இசக்கிமுத்து என்ற சின்னா (23) என்பவர் மணிகண்டனை தாக்கி கம்பால் அடித்தார். இதுதொடர்பாக மணிகண்டன் கல்லிடைக்குறிச்சி போசீல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன இசக்கிமுத்து என்ற சின்னாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com