ஆம்பூர் தாலுகா போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு மணமகன் வீட்டார் மட்டுமே வந்ததால் பெண்ணின் விருப்பத்தை ஏற்று காதல் கணவருடன் ஜெசிகா அனுப்பி வைக்கப்பட்டார்.
காதல் ஜோடி
காதல் ஜோடி
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே வீராங்குப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவர் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த ஜெசிக்கா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவைத்து சமாதானம் பேச முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் மணமகன் வீட்டார் மட்டுமே வந்ததால் பெண்ணின் விருப்பத்தை ஏற்று காதல் கணவருடன் ஜெசிகாவை அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com