போளூர் அருகே தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை

போளூர் அருகே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

போளூர்:

போளூர் அருகே வசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா, சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது 2 மகள்கள் வசூரில் பாட்டியின் பராமரிப்பில் படித்து வருகின்றனர். மணிகண்டன் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

இதுகுறித்து மணிகண்டனின் மாமியார் சின்னப்பொன்னு போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com