ராணிப்பேட்டையில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டையில் தலைவலியால் அவதிப்பட்டு வந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). லாரி டிரைவர். இவர் ஏற்கனவே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சண்முகம் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். அதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com