தர்மபுரி அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

தர்மபுரி அருகே செங்கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

பொம்மிடி:

தர்மபுரி அருகே உள்ள கருத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). லாரி டிரைவர். இவர் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் இருந்து லாரியில் செங்கல் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்றார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பூர் கணவாயில் சென்றபோது லாரி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் டிரைவர் நாகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார். 

இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com