செங்கோட்டையில் நின்ற லாரி மீது ஆட்டோ மோதல்- பெண் பலி

செங்கோட்டையில் சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து
விபத்து
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசையை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி பழனியம்மாள்(வயது 50). இவரும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த வேலம்மாளும் தென்காசியை அடுத்த மத்தாளம்பாறையில் வேலை பார்த்து வருகின்றனர்.

வேலையை முடித்துவிட்டு 2 பேரும் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை செங்கோட்டை அருகே உள்ள முத்து விநாயகபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(40) ஓட்டி சென்றார்.

அவர்கள் பழைய குற்றாலம் வழியாக பிரானூர் பார்டர் அருகே சென்றபோது சாலையோரம் நின்ற மரத்தடி ஏற்றி சென்ற லாரி மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவிற்குள் மரத்தடி புகுந்ததில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆனால் ராமச்சந்திரன் ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் புதுபேட்டையை சேர்ந்த சந்தனகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com