விபத்து
விபத்து

ஆம்பூரில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

ஆம்பூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் பைபாஸ் சாலையில் சான்றோர் குப்பம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மனைவி நிர்மலா (வயது 47). தம்பதிகள் அண்ணாநகர் பகுதியில் உள்ள புத்து கோவிலுக்கு இருசக்கர பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆம்பூர் பைபாஸ் சாலை ராஜீவ் காந்தி சிலை அருகில் சென்று கொண்டு இருந்த போது பெங்களூரிலிருந்து சென்னைக்கு நோக்கி பார்சல் ஏற்றி சென்ற லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிர்மலாவின் தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏற்றி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவன் கண்முன்னே நடந்ததால் அவர் கதறி அழுதார். கோவிந்தராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com