வாகனங்களில் தலைவர்கள் படமா?- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.
மதுரை ஐகோர்ட்
மதுரை ஐகோர்ட்
Published on

மதுரை:

தமிழகத்தில் உள்ள வாகனங்களில் தலைவர்கள் படத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் இது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின் போது நீதிமன்றம் இப்படியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவில், வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com