லாலாபேட்டை அருகே அரசு பஸ் மோதி காவலாளி பலி

லாலாபேட்டை அருகே அரசு பஸ் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

லாலாபேட்டை:

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இவர் திருச்சியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். அவர் மகாதனபுரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி அரசுபஸ் டிரைவர் கும்பகோணத்தைச் சேர்ந்த செல்வராஜ் (55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆறுமுகத்துக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com