மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் பதவி ஏற்றார்

மணிப்பூர் மாநில கவர்னராக பதவி ஏற்றதும் இல. கணேசனுக்கு அம்மாநில முதல்- மந்திரி பிரென்சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மணிப்பூர் கவர்னராக பதவியேற்ற இல.கணேசன்
மணிப்பூர் கவர்னராக பதவியேற்ற இல.கணேசன்
Published on

இதையொட்டி பதவி ஏற்றுக்கொள்வதற்காக நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் சேர்ந்தார். விமான நிலையத்தில் மணிப்பூர் மாநில அதிகாரிகள் இல. கணேசனை வரவேற்றனர்.

இன்று (27-ந் தேதி)காலையில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவி ஏற்புவிழா நடந்தது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் குமார், இல.கணேசனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இல.கணேசனுக்கு தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் சரளமாக பேசத்தெரியும்.

இன்று பதவி ஏற்பு விழாவில் இந்தியில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்பு விழாவில் தமிழக பா.ஜனதா துணை தலைவர் எச்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியன், டால்பின் ஸ்ரீதர் மற்றும் இல.கணேசனின் சகோதரர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com