குளித்தலை அருகே மது- புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

குளித்தலை அருகே மது- புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற திருச்சி மாவட்டம் சிறுகமணி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அதேபோல குளித்தலை ரெயில் நிலைய சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற, அந்த கடையின் உரிமையாளரான சுந்தர்ராஜன் (49) என்பவரை போலீசார் கைது செய்து, கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com