குளித்தலை அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

குளித்தலை அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குளித்தலை:

குளித்தலை பெரியபாலம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்த தங்கராஜா (வயது 41) என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை குளித்தலை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com