குளித்தலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

குளித்தலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள கீழதாளியாம்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று கீழதாளியாம்பட்டி பிள்ளையார் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மகுடேஸ்வரன் (வயது 28), ராஜ்குமார் (37), சக்திவேல் (42), சரவணன் (28), சிவனேசன் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com