குளித்தலை அருகே சாராயம் விற்றவர் கைது

குளித்தலை அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பாம்பலாயி நகர் பகுதியில் மது பாட்டில்களில் சாராயம் மற்றும் போதை மாத்திரைகளை கலந்து விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது பாட்டிலில் சாராயம் ஊற்றி விற்ற அதே பகுதியை சேர்ந்த பூபதி (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com