குளித்தலை அருகே மது விற்ற 2 பேர் கைது

குளித்தலை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குளித்தலை:

குளித்தலை அருகேயுள்ள மைலாடி மற்றும் அய்யர்மலை பகுதியில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது பெட்டிக்கடைகளில் வைத்து மது விற்ற மைலாடியை சேர்ந்த செல்லாண்டி (வயது 45), அய்யர்மலையை சேர்ந்த கணேசன் (65) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 96 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com