குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சிமிழி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது58). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இவர் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது ஏன் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்கிறீர்கள் என்று ரவியின் மகன் நரேந்திரன் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரவி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்து விட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com