கிருஷ்ணகிரியில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரியில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் ஆட்டோ ஸ்டேண்டு உள்ளது. இந்த ஸ்டேண்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தற்போது சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆட்டோ ஸ்டேண்டை மாரியம்மன் கோவில் அருகில் மாற்றி கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டேண்டு வைத்துள்ளோம். எங்களால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனால் சென்னை சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல சுமார் 15 நிமிடங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் பஸ்கள் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆட்டோ ஸ்டேண்டை தொடர்ந்து இதே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். ஆட்டோ டிரைவர்களை போலீசார் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com