கொட்டாம்பட்டி அருகே மது விற்றவர் கைது

கொட்டாம்பட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் கூட்டுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கருங்காலக்குடி கம்பூர் சாலையில் நடத்திய சோதனையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய மது பாட்டில்களை வைத்திருந்த கருங்காலக்குடியை சேர்ந்த ஜெயபாரதி (வயது48) என்பவரை பிடித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com