கொரடாச்சேரியில் விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபர் கைது

கொரடாச்சேரியில் விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி போலீஸ் சரகம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). விவசாயியான இவர் கொரடாச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது கொரடாச்சேரியை அடுத்த மஞ்சக்கொல்லையை சேர்ந்த அருள்தேவன் (35) என்பவர், சதீஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக சதீஷ்குமார் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தேவனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com