கூத்தாநல்லூர் அருகே வாலிபர் தற்கொலை

கூத்தாநல்லூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்தாம்பூர் மேலத்தெருவை சேர்ந்த அழகன் மகன் தினேஷ்குமார் (வயது 27). இவர் கூத்தாநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தினேஷ்குமார் சம்பவத்தன்று எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com