கொண்டலாம்பட்டி அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கொண்டலாம்பட்டி அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல்
மிரட்டல்
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 29). வெள்ளி பட்டறை தொழிலாளி. இவருக்கும் பெத்தனூர் கலர்காடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று சுந்தர் வீட்டில் இருந்தபோது, அங்கு அருண்குமார் வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார், சுந்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுந்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com