தஞ்சை அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது

கள்ளப்பெரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது37) இவர் நேற்று கள்ளப்பெரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது அதே ஊரை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் சுரேசிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்து பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com