ராணிப்பேட்டையில் நகை வியாபாரி- மனைவிக்கு கத்திக்குத்து

ராணிப்பேட்டையில் நகை வியாபாரி மற்றும் அவரது மனைவியை கத்தியால் குத்திய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ராணிப்பேட்டை ஜவுளிக்கடை தெருவை சேர்ந்தவர் சம்பாலால் (வயது 72). நகை வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு கதவை ஒருவர் தட்டியுள்ளார். சம்பாலாலின் மனைவி பார்வதிபாய் (70) சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அந்த நபர் உங்கள் மகன் எங்கே என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். பார்வதி பாய் தடுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பார்வதிபாயின் கழுத்தில் குத்தி உள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு பார்வதியின் கணவர் சம்பாலால் வந்துள்ளார், அவரையும் அந்த மர்ம நபர் கழுத்தில, கத்தியால் குத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com