நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினரை படத்தில் காணலாம்.
நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினரை படத்தில் காணலாம்.

நாமக்கல்லில் கொ.ம.தே.க.வினர் சாலை மறியல்- 90 பேர் கைது

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட கொ.ம.தே.க.வினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on

நாமக்கல்:

தென்பெண்ணையாறு தூள்செட்டி ஏரி நீர்வரத்து கிளை வாய்க்கால் பணியினை விரைந்து முடிக்க வலியுறுத்தி நேற்று தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஈ.ஆர்.ஈஸ்வரனை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர்.துரை, மாவட்ட செயலாளர்கள் பூபதி, பழனிவேல், நதி ராஜவேல், ஜெயக்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 5 பெண்கள் உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை தனியார் பஸ்களில் ஏற்றிய போலீசார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து இருந்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் பஸ்நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com